தமிழ் பயிற்சித்தாள் - விடுகதைகள் -1
விடுகதைகள்
1.மழையில் பூக்கும் பூ. அது என்ன?
2.நீளமான
மனிதனுக்கு நிழல் இல்லை;
அவன் யார்?
3.ஓட்டுக்குள்ளே வீடு வீட்டுக்குள்ளே யாரு?
நான் யார்?
4.இடி இடிக்கும்; மின்னல் மின்னும்; மழை
பெய்யாது. அது என்ன?
5.எட்டுக்கால்களை உடையவன்; விடாமுயற்சி உடையவன். அவன் யார்?
6.வெள்ளிக் கிண்ணத்தில் தண்ணீர். அது என்ன?
7.வெள்ளிக்
குகைக்குள் தங்கப்புதையல்.
அது
என்ன?
8.உச்சியிலே கிரீடம்; உடம்பெல்லாம் கண்;
அவன் யார்?
9. குரலோ இனிப்பு;அவளோ கருப்பு; அது என்ன?
10.பல் துலக்க மாட்டான், ஆனால் இவன் பல்
எப்பொழுதும் வெள்ளை; இவன் யார்?
11.உருவத்தில் சிறியவன், உழைப்பில் பெரியவன்;
அவன் யார்?
12.கடலிலே
கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ: அது என்ன பூ?
விடைகள்
1.குடை
2.சாலை
3.நத்தை
4.பட்டாசு
5.சிலந்தி
6.தேங்காய்
7.முட்டை
8.அன்னாசிப்பழம்
9.குயில்
10.பூண்டு
11.எறும்பு
12.உப்பு
Comments
Post a Comment