Tamil essay -தமிழ் கட்டுரை -மதுரை


 



                                                                         கட்டுரை                                                                                             மதுரை மாநகர்

முன்னுரை

                        வரலாற்றுச் சிறப்புமிக்க பல நகரங்கள் தமிழகத்தில் உள்ளன. அவற்றுள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரமும் ஒன்றாகும். வரலாற்று சிறப்புமிக்க இவ்வூரைப் பற்றி இங்கு காண்போம்.

நகரமைப்பு  

                      வைகை ஆற்றின் கரையில் மதுரை மாநகர் அமைந்துள்ளது. இவ்வூரின் நடுவில் அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை மையமாக வைத்து சதுர வடிவில் தெருக்கள் அமைந்துள்ளன. ஆடி வீதி, சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி எனத் தமிழ் மாதங்களின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. தமிழ் புலவர்கள் இந்நகர் தாமரை இதழ்களைப் போல அமைந்துள்ளதாகப் பாடியுள்ளனர்.

பெருமை

                 மதுரை மாநகரைப் பாண்டிய மன்னர்கள் தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்துள்ளனர். பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊரும் இதுவேயாகும். சங்க இலக்கியங்களில் இந்நகரம் சிறப்பித்து பாடப்படுகின்றது. இன்று மதுரை கோவில் மாநகரமாய் விளங்குகின்றது. இரவு பகல் எந்நேரமும் மக்கள் நடமாடுவதால் தூங்கா நகரம் என்ற பெருமைக்கும் உரியது ஆகும். நாள் தோறும் விழாக்கள் நடந்து கொண்டே இருப்பதால் விழா நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக மதுரை விளங்குகிறது. மதுரையில் ஒரு பல்கலைக் கழகமும், சில கல்லூரிகளும், பள்ளிகளும் உள்ளன.

காணத்தக்கவை

                                மதுரை மாநகரின் நடுவில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில், தூய மரியன்னை பேராலயம், திருமலை நாயக்கர் மஹால், மாரியம்மன் தெப்பக்குளம், காந்தி அருங்காட்சியகம், விமானநிலையம் ஆகியன கண்டு மகிழத்தக்கவையாகும். மேலும் மதுரையை சுற்றியுள்ள திருப்பரங்குன்றம், அழகர்கோவில், யானைமலை, திருப்புவனம் போன்றவையும் காணத்தக்க இடங்களாகும்.

முடிவுரை

                 தூங்கா நகரமாக விளங்கும் மதுரை நகரின் பெருமைகளை காப்பது இங்கு வாழும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

Comments

Popular posts from this blog

புதிர்கள்

Tamil comprehension - சாணக்கியரின் நேர்மை