நரியும் அதன் நிழலும் Comprehension -தமிழ் கருத்துணர்திறன் நரியும் அதன் நிழலும்

 

                                                                                      தமிழ் பழகு

                                                             

பின்வரும் கதையைப் படித்து வினாக்களுக்கு விடை தருக

                                            (  Tamil Comprehension )

நரியும் அதன் நிழலும்

                 ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் பெரியதாக தெரிந்தது. நரிக்குமிகவும் மகிழ்ச்சி. "நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். அதுவும் இந்த காட்டின் ராஜாவாக உள்ள சிங்கத்தை விடவும் பெரியவனாக நான் உள்ளேன் என நினைத்துகொண்டே வேட்டைக்குச் சென்றது.

செல்லும் வழியில் நரி ஒரு சிங்கத்தை கண்டது. சிங்கமோ சற்று முன்னர் தான் ஒரு மானை வேட்டையாடி அதை உண்ட களைப்பில் மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தது.

நரியும் தன்னுடைய நிழல் சிங்கதைவிடவும் பெரியதாக இருப்பதாக நினைத்துகொண்டு சிங்கம் வரும் வழியில் நடந்து சென்றது. சிங்கமும் நரியை ஒன்றும் செய்யாமல் கடந்து சென்றது.

நரிக்கோ ரொம்ப சந்தோஷம். நாம் சிங்கத்தை விடவும் பெரியதாக இருப்பதனால் சிங்கம் என்னைக்கண்டு பயந்து சென்றது என நினைத்து கொண்டு அன்று மாலை தன்னுடைய வீட்டிற்க்குச் சென்றது.

மாலை வீட்டிற்குச் சென்றதும் நரி காட்டில் உள்ள மிருகங்களை எல்லாம் அழைத்தது. அனைத்து மிருகங்களும் நரியின் கூட்டத்திற்கு வந்தன. நரி அனைத்து மிருகங்களிடமும், "இனிமேல் இந்த காட்டிற்கு நான் தான் ராஜா" என்றது.

யானையோ, “இதை நாங்கள் ஏற்க முடியாது என்றது. உடனே நரி காலையில் நடந்த சம்பவத்தைக் கூறி சிங்கமே என்னைக் பார்த்து பயந்து சென்றது” என்றது. கூட்டத்தில் இருந்த மானோ, “சிங்கத்தை உன் முன் மண்டியிடச் சொல் பிறகு உன்னை இந்த காட்டிற்கு ராஜவாக ஆக்குகிறோம்” என்றது.

அடுத்த நாள் நரி அந்த சிங்கத்தை தேடிச் சென்றது. செல்லும் வழியில் சிங்கம் தன்னுடைய பாதையை நோக்கி வருவதை கண்டு நரி கர்வத்துடன் நின்றது.

சிங்கமோ மிகவும் கோபம்கொண்டு தரக்குறைவாக பேசிய நரியை பார்த்து, "உன்னை மன்னித்து விடுகிறேன் உடனே இங்கிருந்து செல்" என்றது.

நரியோ சிங்கம் தன்னை கண்டு பயந்து விட்டது என நினைத்து “முடியாது” என்று பதில் கூறிக்கொண்டே தன்னுடைய நிழலைப் பார்த்தது. அது மதிய நேரம் என்பதால் நிழல் உண்மையான அளவில் இருந்தது. அப்பொழுது தான் நரிக்கு புரிந்தது சூரிய ஒளியில் தான் தன்னுடைய நிழல் பெரியதாக இருந்தது என்று.இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கம் நரியை ஒரே அடியினால் கொன்றது.

 

நீதி: பேராசை பெரும் நஷ்டம்

வினாக்கள்

1.     சூரியன் உதிக்கும் திசை___________. (கிழக்கு / மேற்கு)

 

2.     சரி ஏன்  மகிழ்ச்சி அடைந்தது ?

 

3.     நரி அனைத்து மிருகங்களையும் கூட்டத்திற்கு அழைத்து என்ன கூறியது ?

 

 

4.     சிங்கத்தை உன் முன் மண்டியிடச் சொல், பிறகு உன்னை இந்த காட்டிற்கு ராஜாவாக ஆக்குகிறோம் என்று யார் யாரிடம் கூறியது?

 

 

5.     இக்கதையில் இருந்து நீ அறிந்து கொண்ட நீதி யாது?

 

 


6.     எதிர்ச்சொல் தருக:

·       காலை          × ___________.

·       முடியும்       × ___________.

·       மகிழ்ச்சி      × ___________.

·       மெதுவாக   × ___________.

·       பெரிய           × ___________. 

 

7.     பின் வரும் சொற்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுது:

 

                 தமிழ்

           ஆங்கிலம்

1.அதிகாலை

 

2.சூரிய ஒளி

 

3.நிழல்

 

4.மதியம்

 

5.பாதை

 

6.நீளம்

 

 

 

Comments

Popular posts from this blog

புதிர்கள்

Tamil comprehension - சாணக்கியரின் நேர்மை