தமிழ் பயிற்சித்தாள் -கருத்துணர்திறன் தங்க முட்டை
தங்க
முட்டை!

ஒரு
விவசாயி தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தார்;
அவரிடம் தங்க முட்டையிடும் ஒரு வாத்து இருந்தது.
தினமும் அந்த வாத்து ஒரு தங்க முட்டை அளிக்கும்;
அதை விற்று அந்த விவசாயி தனது தினசரி வாழ்க்கையை நடத்தி வந்தார்.
திடீரென
ஒரு நாள் வாத்தின் வயிற்றில் இருக்கும் அனைத்து முட்டைகளையும், ஒரே நாளில் எடுத்து
விற்றுவிட்டால் அதிக பணம் கிடைக்கும் என்று சிந்தித்த விவசாயி, அதனை தனது
மனைவியிடம் கூறினான்.
அவன்
மனைவியும் கொஞ்சம் கூட யோசித்து பார்க்காமல், சரி என்று கூற, அச்சமயமே அவர்கள்
வாத்தினை அறுத்து அதிலிருந்து தங்க முட்டைகளை எடுக்க முயன்றனர்;
ஆனால்
தங்கமுட்டைகளுக்குப் பதிலாக வாத்தின் உடலில் இருந்து இரத்தமே வெளிப்பட்டது.
தம்பதியர் பெரும் ஏமாற்றம் அடைந்ததுடன் தங்களுக்கு இத்தனை நாள் சோறு
போட்டுக்கொண்டிருந்த பெரும் மூலதனத்தையும் இழந்து தவித்தனர்.
நீதி
: பேராசை பெரும் நஷ்டம்
நிரப்புக
1.விவசா ____ ( சி/யி)
2.குடு ___பம் ( ன்/ம்)
3.வா ___க்கை ( ழ்/ல்)
4.தி ___ ரென
(டீ /டி)
5.தங்க மு ___ டை (ட் /த் )
6.ஏமாற்___ ம் (ட் /ற் )
7.யோச ___ (னை /ணை)
8.பேரா ____ (கை /சை)
9.கொ ___ சம்
( க்/ஞ்)
10.வா ___ து (ட் /த் )
11. விவசாயிடம் தங்க முட்டை இடும் _________ இருந்தது. (வாத்து / கோழி).
12. வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் ஒரே நாளில் எடுக்க
யோசனை கூறியவர் ___________. (விவசாயி /மனைவி)
13.வாத்தின் வயிற்றை அறுத்த போது ____________ வெளிவந்தது.(தங்க முட்டை/ இரத்தம் )
14.இறந்து போன் வாத்தைக் கண்டு தம்பதி _____________ அடைந்தனர்.(மகிழ்ச்சி /ஏமாற்றம்)
15. பேராசை பெரும் _________.(நஷ்டம் /இலாபம்).
Comments
Post a Comment