தமிழ் பயிற்சித்தாள்-கருத்துணர்திறன் std 3-5
தமிழ் பயிற்சித்தாள்-கருத்துணர்திறன்
அன்பான சிங்கம்
அது ஓர் அடர்ந்த காடு. அந்த காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அது மிகவும் அன்பானது. குகையில் இருந்து வெளியே வந்தது. அப்போது மரத்தின் கீழே பசியோடு அமர்ந்திருந்த அணிலைக் கண்டது.
சிங்கம் அணிலின் அருகே சென்றது. அணில் பயந்து நடுங்கியது. சிங்கமோ அணிலுக்கு பழம் ஒன்றைக் கொடுத்தது. அணில் அன்புடன் நன்றி கூறியது.
1. உனக்குத் தெரிந்த காட்டு விலங்குகளின் பெயர்கள் 5 எழுது.
2. காட்டின் அரசன் யார்?
3. எதிர்ச் சொல்
• கீழே × __________.
• உள்ளே × __________.
• அருகில் × __________.
Comments
Post a Comment