Tamil work sheet comprehension - ஓரறிவு முதல் ஆறறிவு வரை
ஓரறிவு முதல் ஆறறிவு வரை
அறிவு என்பது ஆறு வகையாக பிரிக்கப்படுகிறது ஓரறிவு ஈரறிவு மூவறிவு என்று கூறுகின்றோம். எந்த உயிரினத்திற்கும் எத்தனை அறிவு இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.
ஓரறிவு
ஓரறிவு என்பது உடலை மட்டும் கொண்டிருக்கும் உயிர் ஆகும். அதனால் அதற்கு தொடுதல் உணர்ச்சி மட்டுமே இருக்கும். தன் உடலால் மட்டும் உணர்வது முதலாம் அறிவு ஆகும். ஓர் அறிவை மட்டும் பெற்றிருப்பது தாவரங்கள். எடுத்துக்காட்டு மரம் செடி கொடிகள் போன்றவைகளாகும்.
ஈரறிவு
இரண்டாவது அறிவு என்பது உடல் மற்றும் வாய் ஆகிய இரண்டை மட்டும் பெற்றிருக்கின்ற உயிரினமாகும். உடலால் தொடுதல் உணர்வையும் நாக்கினால் சுவைத்தல் உணர்வையும் கொண்டிருக்கும். ஒரு சில கடல் வாழ் உயிரினங்கள் ஈரறிவைப் பெற்றிருக்கும்.எடுத்துக்காட்டு நத்தை சங்கு
மூவறிவு
மூவறிவு என்பது உடல், நாக்கு(வாய்) மற்றும் மூக்கு ஆகிய மூன்றை மட்டும் கொண்டிருக்கும் உயிரினமாகும். அவை என்னவென்றால் ஊர்வன வகையை சார்ந்ததாகும். எடுத்துக்காட்டு: கரையான், எறும்பு, அட்டை இவற்றைத்தான் மூன்றறிவு உயிர்களை என்கின்றோம்.
நாலறிவு
நான்கறிவு உயிர்கள் என்பது உடல், வாய், மூக்கு மற்றும் கண் இவற்றை மட்டும் பெற்றிருக்கும் உயிரினமாகும். இந்த நான்கின் மூலமாக உணர்வுகளை உணரும் அதனால் இதை நான்கறிவு உயிரினம் என்கிறோம். அவை என்னவென்றால் பூச்சியினங்கள் ஆகும் வண்டு, நண்டு, தும்பி போன்றவையாகும்.
ஐந்தறிவு
ஐந்தறிவு உயிர்கள் என்பது உடல், வாய், மூக்கு, கண் மற்றும் காது ஆகியவற்றைக் கொண்டிருக்கும் உயிரினங்கள் ஆகும்.ஐந்து உணர்வுகளைப் பெற்றிருப்பதால் ஐந்தறிவு உயிரினம் என்று கூறியிருக்கிறோம். எடுத்துக்காட்டு பறவைகள் விலங்குகள்
ஆறறிவு
ஆறறிவு என்பது உடல்,வாய், கண், காது மற்றும் சிந்தனை என்பதை கொண்டு செயல்படும் மனிதர்களை குறிக்கிறது. மக்கள் மட்டும்தான் பகுத்தறிவு கொண்டவர்கள். அதனால் தான் மனிதர்களுக்கு மட்டும் ஆறறிவு இருக்கிறது என்று கூறிகிறோம். பகுத்தறிவு என்பது சிந்திக்கும் திறன் கொண்டிருப்பதைக் குறிக்கும். எடுத்துக் காட்டு மனிதர்கள். அப்படியென்றால் விலங்குகள் சிந்திப்பது இல்லையா? என்ற கேள்வி நமக்குள் வருகின்றது. அவை தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சில முயற்சிகளில் ஈடுபடும் அவ்வளவுதான். வேறு எந்த சிந்தனையும் தோன்றாது நல்லது எது கெட்டது எது என்று ஆராய்ந்து செயல்படாது ஒரு செயலால் ஏற்படும் விளைவுகள் பற்றி அவருக்கு தெரியாது அதனால் மனிதர்கள் ஒன்றின் விளைவுகளை நன்கு ஆராய்ந்த பெண் தான் அதில் ஈடுபடுவார்கள் இதனைத்தான் பகுத்தறிவு என்கின்றோம்.
சரியா தவறா என
1. மூன்று அறிவை கொண்டது தாவரங்கள் ________.
2. விலங்குகளை உயர்திணை என்று அழைக்கின்றோம்._________.
3. மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது.________.
4. பறவைகளை உயர்திணை என்று அழைக்கின்றோம்.________.
5. விலங்குகளுக்கு பகுத்தறியும் திறன் உண்டு.________.
6. தாவரங்களுக்கு உயிர் என்பது கிடையாது._________.
7. மனிதர்களுக்கு பகுத்தறிவும் திறன் உண்டு._______.
வினாக்களுக்கு சரியான விடையளி
1. அறிவு எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது? அவை யாவை?
2. பகுத்தறியும் திறன் படைத்த உயிரினம் எது?
3. ஐந்தறிவு கொண்ட உறுப்புகள் எவை எவை?
4. தாவரங்களுக்கு எத்தனை அறிவு உள்ளது?
5. பறவை இனங்கள் எத்தனை அறிவை கொண்டுள்ளன?
6. பகுத்தறிவு என்றால் என்ன?
7. உயர்திணை என்றால் என்ன?
8. அஃறிணை என்றால் என்ன?
Comments
Post a Comment