ர,ற வேறுபாடு அறிக Tamil work sheet
ர, ற வேறுபாடு அறிக
மரம் - ஓரறிவு உயிர்
1.மரம் மனிதனுக்கு பலவகையில் பயன்படுகிறது.
மறம் - வீரம்
2.பண்டைய தமிழர்கள் மறச் செயல்புரிந்து புகழ் பெற்றனர்.
இரத்தல் – யாசித்தல்.
3.பிறரிடம் யாசித்தல் இழிவானது.
இறத்தல் – உயிர் உடலை விட்டு பிரிதல்.
4.இறக்கும் வரையிலும் கல்வி கற்க வேண்டும்.
குரை – நாய் எழுப்பும் ஒலி ( சத்தம் )
5.திருடனைப் பார்த்து நாய் குரைத்தது.
குறை – தவறு /மிச்சம்
6.பிறரிடம் குறைகளை காணக் கூடாது.
பற -சிறகை விரித்து உயரே செல்லல்.
7.கழுகு உயரத்தில் பறக்கும்.
பர – பரவிய
8.தமிழர்கள் உலகெங்கும் பரந்த அளவில் வாழ்கின்றனர்.
எரி – நெருப்பு
9.நாளுக்கு நாள் எரிபொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
எறி – வீசுதல்
10.குப்பைகளைத் தெருவில் எறியக்கூடாது.
அரி - சிங்கம்
11.அரி காட்டின் அரசன்.
அறி – தெரிந்து கொள்
12.உலக நடப்புகளை அறிந்து கொள்.
இறை - கடவுள்
13.எழுத்து அறிவித்தவன் இறைவன்.
இரை -உணவு
14.பறவைகள் இரைத் தேடப் புறப்பட்டன.
அரை – பாதி
15.ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன்.
அறை - வீட்டின் ஒரு பகுதி
16.எங்கள் வீட்டின் சமையல் அறை அழகாக இருக்கும்.
அருகு – பக்கம்
17.எங்கள் வீட்டின் அருகில் பூங்கா உள்ளது.
அறுகு – ஒரு வகைப் புல்
18.அறுகம்புல் சாறு உடல் நலத்திற்கு ஏற்றது.
உரை – பேச்சு
19.மேடையில் தலைவர் உரை நிகழ்த்தினார்.
உறை – மூடி, தலையணை உறை
20.மருத்துவர் கை உறை அணிந்து பரிசோதித்தார்.
ஏரி – நீர்நிலை
21.ஏரியில் படகு சவாரி செய்யலாம்.
ஏறி – மேலே ஏறி
22.கந்தன் மாடிப் படிகளில் ஏறி மேலே சென்றான்.
உரு – வடிவம்
23.யானை நிலத்தில் வாழும் விலங்குகளில் பெரிய உருவம் கொண்டது.
உறு – மிகுதி /பெரிய
24.கொக்கு உறுமீன் வரும்வரை காத்திருக்கும்.
பரி – குதிரை
25.வீரன் பரியில் போர்க்களத்திற்குச் சென்றான்.
பறி - பிடுங்குதல்
26.மங்கை தோட்டத்தில் உள்ள பூக்களைப் பறித்தாள்.
கறி – காய்கறி
27.அம்மா கறி சமைத்தாள்.
கரி – அடுப்புக்கரி
28.அடுப்புக்கரி கருப்பு வண்ணம் உடையது.
திரை – அலை
29திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
திறை – வரி
30.ஒவ்வொரு குடிமகனும் அரசாங்கத்திற்கு திறை செலுத்த வேண்டும்.
கரை – மேட்டுப்பகுதி
31ஆற்றங்கரை ஓரங்களில் பனை மரங்களை நட வேண்டும்.
கறை – அழுக்கு
32.நாம் கறை இல்லா ஆடைகளை அணிய வேண்டும்.
Comments
Post a Comment