தென்னை கருத்துணர்திறன் -தென்னைமரம்
கருத்துணர்திறன்
தென்னைமரம்
தென்னிந்தியாவில் மிக அதிகமாகத் தென்னை மரத்தைக் காணலாம். லட்சத்தீவுகள், அந்தமான் தீவுகள், ஒரிசாவிலும் தென்னை மரத்தை அதிக அளவு காணலாம். பதினைந்து முதல் முப்பது மீட்டர் உயரமாக வளரும்.
பெருமணல் கலந்த நல்ல மண்ணில் தென்னை மிகவும் செழிப்பாக வளரும். சரளை மண்ணிலும், குறுமண்ணிலும், கருங்களியிலும், மணற்பாங்கான இடங்களிலும் வளரும். அந்த இடங்கள் கட்டாந்தரையாக இல்லாமலும், தண்ணீர் தேங்காமல் வடிந்து போகக் கூடியவையாகவும் இருப்பது அவசியம்.
தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு பயன்படுகிறது. காயில் உள்ள பருப்பு பச்சையாக இருக்கும்போது சமையலுக்கு பயன்படுகிறது. காய்ந்தபின் கொப்பரையாக மாறி, எண்ணெய் கொடுக்கிறது. தேங்காய் எண்ணெயின் பயன்கள் பல. குளிர்ச்சியும், சத்தும் தரும் பானமாக, குளுக்கோஸ் நிறைந்ததாக இளநீர் உள்ளது. மனிதனுக்கு இயற்கையின் வரம் தென்னை.
தென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு என எல்லா உறுப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஞானம் என்றும், வளமை என்றும் கூறியிருக்கின்றார்கள்.
தேங்காய் உணவுப் பொருளில் பயன்படுகிறது. இதன் எண்ணெய் உணவுப்பொருளாகவும் எரிப்பொருளாகவும் பயன்படுகிறது. தேங்காயும், அதன் தண்ணீரும் ஜீரணமண்டலத்தை வலுப்படுத்த உதவும். வயிற்று இறக்கம், நாவறட்சி, மயக்கம், படபடப்பு, இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றைக் குணப்படுத்த உதவும்.சங்க நூல்கள் தென்னை மரத்தை ‘தெங்கு’ என்று கூறும். இதற்கு ‘தாழை’ என்ற பெயரும் உண்டு.
வினாக்களுக்கு விடையளிக்க:
1.தென்னிந்தியாவில் அதிகமாக காணப்படும் மரம் எது?
2. தென்னை மரம் சுமார் எத்தனை மீட்டர் உயரம் வரை வளரும்?
3. தென்னை மரம் எவ்வகை நிலங்களில் செழிப்பாக வளரும்?
4. தென்னை மரத்திலிருந்து பெறப்படும் பொருட்களின் பெயர்களை வரிசைப்படுத்து.
5.தேங்காய் எண்ணெயின் பயன்கள் யாவை?
6. சங்க இலக்கியத்தில் தென்னைமரம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
எதிர்ச் சொல்
1.இயற்கை ×
2.காய் ×
3.அதிகம் ×
4.வளரும் ×
Comments
Post a Comment