கட்டுரை -கடல்

 

*நாம் வாழும் பூமியின் மேற்பரப்பில் நிலப்பகுதியாகவும், நீர் பகுதியாகவும் சூழப்பட்டுள்ளது. பெரிய நீர் பகுதியை கடல் என்று அழைக்கின்றோம்.

*கடலுக்குள் ஆயிரக்கணக்கில் விலங்குகளும், தாவரங்களும் கண்ணுக்கு தெரியாத உயிரினங்களும் வாழ்கின்றன.

*கடலில் இருந்து மீன்கள் முத்துக்கள் சிற்பிகள் உப்பு முதலான பொருட்கள் பெறப்படுகின்றன.

*கடலில் பாசி வகையை சார்ந்த தாவரங்கள் வளர்கின்றன.

*ஆழ்கடலில் கடல்பசு, கடல் பாம்பு, ஆமை முதலிய உயிரினங்கள் வாழ்கின்றன.

*ஆழ்கடலில் மலைகள் பள்ளத்தாக்குகள் எரிமலைகள் நீரோட்டங்கள் உண்டு.

*உள்நாட்டு, வெளிநாட்டு வாணிகம் சிறப்பாக நடைபெற கடல் உதவி செய்கிறது.

*மழை நீர் தந்து மண் உயிர்களை காப்பது கடலாகும்.

*மீனவர் சமுதாயம் கடலில் மீன் பிடிக்கும் தொழிலை நம்பியே வாழ்கின்றனர்.


Comments

Popular posts from this blog

புதிர்கள்

Tamil comprehension - சாணக்கியரின் நேர்மை