கட்டுரை நீ சென்று வந்த சுற்றுலா (அ) ஊர் பற்றி வருணித்துப் எழுது
கட்டுரை
நீ சென்று வந்த சுற்றுலா (அ) ஊர் பற்றி
வருணித்துப் எழுது
நாங்கள் மகிழ்வுந்தில், செங்கல்பட்டு அருகில்
உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குச் சுற்றுலா சென்றோம். மிகுந்த
உற்சாகத்துடன் பயணம் தொடர்ந்தது. செல்லும் வழியில் உள்ள கோயில் ஒன்றின்
வெளிப்பிரகாரத்தில் உணவு உண்டோம்.
கோயில் வாசலில் வயதான முதியோர் ஒருவர் உணவின்றி
வருந்தியதைக் கண்டோம். நாங்கள் எடுத்துச் சென்றிருந்த உணவில் சிறிதளவு கொடுத்து,
அவரை உணவு உண்ண வைத்து, அவருடன் மகிழ்ந்து உரையாடி அவர் பற்றிய விவரங்களைத்
தெரிந்து கொண்டோம். அதன் பிறகு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வந்தோம்.
பல ஊர்களில் இருந்தும் வண்ணமயமான பறவைகள் அங்கு
வருவதைப் பார்த்து மகிழ்ந்தோம். அதைக் காணும் மனிதர்களின் கூட்டம் ஏராளம் ஏராளம்.
பல நாடுகளில் இருந்தும் பறவைகள் அங்கு தங்கியிருந்து செல்வதைக் கண்டோம். அதனால்
அவ்விடத்திற்குப் ‘பறவைகள் சரணாலயம்’ என்று அழைக்கின்றனர் போலும். நாங்கள்
எடுத்துச் சென்றிருந்த சில தானியங்களைப் பறவைகளுக்குப் போட்டோம். அங்குச் சிறிது
நேரம் விளையாடிவிட்டு மீண்டும் வீடு திரும்பினோம்.
Comments
Post a Comment