ஒரு சொல் பல பொருள் - வாக்கியங்கள்


 


அரி  - திருமால், காற்று, அரிதல், சிங்கம்

*அரி காட்டின் அரசன்

*அரியும் அரனும் ஒன்று.

 

அணி-  அணிகலன், அழகு, உடுத்து.

*ராணி அழகான புத்தாடைகள் அணிந்தாள்.

*பொன்னால் செய்த அணிகலனை விட புன்னகையே அழகு.

 

அன்னம் சோறு, ஒரு வகை பறவை

*அன்னமிட்ட வரை ஒரு நாளும் மறவாதே.

*அன்னப்பறவை நீரில் அழகாக நீந்தியது.

 

அரவம்- ஒலி பாம்பு

*விளையாட்டு திடலில் பார்வையாளர்களின் அரவம் அதிகமாக இருந்தது.

*தவளையை அரவம் கவ்வியது.

 

அடி கீழ்ப்பகுதி, பாதம், அடித்தல்.

*மரத்தின் அடிப்பகுதியில் நீர் ஊற்ற வேண்டும்.

*இறைவனின் அடியை பற்றுதல் வேண்டும்.

 

அலை அலைகடல், திரிதல்.

*கடல் அலைகள் ஓய்வதில்லை.

*நரி இரைத் தேடி அலைந்தது.

 

அணை நீர் நிலை , தழுவுதல்

*ஆறுகளின் குறுக்கே அணை கட்டி நீரை சேமிக்க வேண்டும்.

*தாய் தன் குழந்தையை அன்போடு அணைத்தாள்.

 

அறை வீட்டின் ஒரு பகுதி ,அடித்தல்.

*எங்கள் வீட்டில் ஒரு வரவேற்பறை ஒரு சமையலறை இரண்டு படுக்கை அறைகள் உள்ளன.

 *தவறு செய்யும் குழந்தைகளை அடித்து 

திருத்த நினைப்பது தவறு.

 

அரை பாதி, மாவு அரைத்தல்.

*என் அப்பா கொடுத்த பழத்தில்

அரைப்பகுதியைத் தின்றேன்.

*என் அம்மா தோசைக்கு மாவு அரைத்தாள்.

 

 

 


Comments

Popular posts from this blog

புதிர்கள்

Tamil comprehension - சாணக்கியரின் நேர்மை