கருத்துணர்திறன் வகுப்பு 3-6
உரைப்பகுதியை படித்து வினாக்களுக்கு விடையளிக்க
சிறு தானிய உணவுகளே நம் உடல் நலத்திற்கு ஏற்றவை. குதிரை வாலி அரிசி, தினை, வரகரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம், பனிவரகு அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, போன்றவை சிறு தானியங்கள் ஆகும். இந்தச் சிறு தானியங்களைக் கொண்டு பல உணவு வகைகளை மண் பானைகளில் சமைத்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. நாம் உண்ட உணவு முழுமையாகச் செரித்தபிறகுதான் அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். இதைத் தான் நம் முன்னோர் “பசித்துப் புசி” என்றனர். இவற்றைத் தவிர்த்துவிட்டுத் துரித உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியதே பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. சிறு தானிய உணவுகளை உண்போம்!
வளமான வாழ்வைப் பெறுவோம்!
வினாக்கள்
1.எவ்வகை உணவு முறை நமக்கு ஏற்புடையது?
2.சிறு தானியங்களுள் எவையேனும் நான்கு எழுதுக.
3.துரித உணவு வகைகளை உண்ணக் கூடாது, ஏன்?
Comments
Post a Comment