1. இரவில் உணவு தேடிடுவேன், தலைகீழாகத் தொங்கிடுவேன். நான் யார்? 2. கரைந்து கரைந்து அழைத்திடுவேன், கூட்டமாக வாழ்ந்திடுவேன். நான் யார்? 3. பச்சை நிறத்தில் இருந்திடுவேன், பழங்களைக் கொத்தித் தின்றிடுவேன். நான் யார்? 4. மழை வருமுன்னே உணர்த்திடுவேன், தோகை விரித்து ஆடிடுவேன். நான் யார்? 5. வெண்மை நிறத்தில் நானிருப்பேன், ஒற்றைக் காலில் நின்றிடுவேன், நான் யார்?
சாணக்கியரின் நேர்மை இந்திய வரலாற்றில் சரித்திர புகழ் பெற்ற அரசர்களுள் சந்திரகுப்தர் ஒருவர். சந்திரகுப்தரின் குருவாகவும், அரசவை தலைமை அமைச்சராகவும் சாணக்கியர் இருந்தார். அவர் ஒரு அரசியல் மேதை. ஒருநாள் அரசவைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது அப்பொழுது சாணக்கியர் தம் மன்னரிடம் “குடிமக்கள் கடும் குளிரால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு அரசு செலவில் கம்பளிப் போர்வை கொடுத்து உதவ வேண்டும்” என்று கூறினார். “தலைமை அமைச்சர் அவர்களே தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.குளிரினால் வாடும் நம் குடிமக்களுக்கு அரசின் சார்பாக கம்பளிப் போர்வை வழங்கும் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக்கிறேன்”. என்றார் அரசர். அதன்படியே ஏழைகளுக்கு வழங்க வேண்டிய கம்பளிப் போர்வைகளை சாணக்கியர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். செய்தி அறிந்த கொள்ளையர்கள் கம்பளி போர்வைகளைத் திருடி விற்றால் பல ஆயிரம் பொற்காசுகள் கிடைக்...
Comments
Post a Comment