முத்துவும் இரண்டு நண்பர்களும்
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
ஒரு நாள் மாலை முத்துவின் வீட்டிற்கு அவனுடைய நண்பர்களான கென்னடியும் அன்வரும் விளையாட வந்தனர். பிறந்து சில நாள்களே ஆன நான்கு நாய்க் குட்டிகளைத் தோட்டத்தில் கண்டனர். நாய்க் குட்டிகளைத் தங்கள் வீட்டிற்குக் கொண்டு செல்ல விரும்பினர். இருவரும் ஆளுக்கொரு நாய்க் குட்டியைத் தூக்கிக் கொண்டனர். முத்து அவர்களிடம், “நண்பர்களே, பால் குடிக்கும் இந்தக் குட்டிகளைத் தாயிடமிருந்து பிரிக்க வேண்டாம். நம்மை நம் பெற்றோரிடமிருந்து யாராவது பிரித்தால் நாம் எவ்வளவு துன்பப்படுவோம், சிந்தித்துப் பாருங்கள்” என்று கூறினான்.
நண்பர்கள் அமைதியாக நாய்க்குட்டிகளைக் கீழே இறக்கிவிட்டனர். நாய்க் குட்டிகள் மகிழ்ச்சியாகத் தம் தாயோடு விளையாடுவதை நண்பர்கள் மூவரும் பார்த்து மகிழ்ந்தனர்.
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க:
1.முத்துவின் தோட்டத்தில் எத்தனை நாய்க்குட்டிகள் (1) இருந்தன?
_____________________________________________________________.
2.கென்னடியும் அன்வரும் என்ன செய்ய விரும்பினர்? (1)
_____________________________________________________________
_____________________________________________________________.
3.நண்பர்கள் இருவரும் முத்துவின் வீட்டிற்கு எதற்காக (1) வந்தனர்?
_____________________________________________________________
_____________________________________________________________.
4.நண்பர்களுக்கு முத்துவின் அறிவுரை என்ன? (2)
_____________________________________________________________
_____________________________________________________________
_____________________________________________________________.
Comments
Post a Comment