Posts

Showing posts from November, 2023

நேர்மை

  மன்னன் ஒருவன் தன் நாட்டு மக்கள் நேர்மையாக வாழ்கின்றனரா என்று அறிய விரும்பினான். அதனால் அரசுப் பணியாளரிடம் இரண்டு ரொட்டித் துண்டுகளைக் கொடுத்து இரண்டு பேரிடம் கொடுக்கச் சொன்னார். ஒரு ரொட்டியில் வைரக்கற்களை உள்ளே வைத்தும் ஒரு ரொட்டித் துண்டில் ஒன்றும் வைக்காமலும் கொடுத்து விட்டார். அரசுப் பணியாளர் அரண்மனையை விட்டு வெளியே சென்று வைரக்கற்கள் உள்ள ரொட்டியைச் சாது ஒருவரிடமும் சாதாரண ரொட்டியைப் பிச்சைக்காரரிடமும் கொடுத்தான். மன்னர் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார். சாது ரொட்டியை வாங்கிப் பார்த்தார். பெரியதாகவும் கரடுமுரடாகவும் இருந்ததால் அது வேகவில்லை என எண்ணி அதனைப் பிச்சைக்காரரிடம் கொடுத்துவிட்டுப் பிச்சைக்காரரிடம் இருந்த ரொட்டியை அவர் வாங்கிக் கொண்டும் சென்று விட்டார். சாது வீட்டுக்குச் சென்றார். தாடியை அகற்றி விட்டு ரொட்டியைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் தாடியைப் பொருத்திக் கொண்டு வெளியே சென்றுவிட்டார். பிச்சைக்காரர் வீட்டிற்குச் சென்றார். தன் மனைவியுடன் ரொட்டியைப் பகிர்ந்து உண்பதற்காக எடுத்தார். அதற்குள் விலையுயர்ந்த வைரக் கற்களைப் பார்த்ததும் அதனை அரசுப் பணியாளரிடம் கொடுக்க  மு...

பட்டம் கருத்துணர்திறன்

 உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. குப்பன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். தான் செய்யும் வேலையில் யாரும் குறுக்கிடக்கூடாது என்று எண்ணுவான். சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமென்பதே அவன் ஆசை. ஒருநாள், அவன் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அப்போது, அவனுடைய தந்தை அங்கு வந்தார். “இந்தப் பட்டத்தைப் பார்க்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறது” எனக் கேட்டார். அதற்குக் குப்பன், “இந்த நூல் பட்டத்தின் சுதந்திரத்தைத் தடுத்துக் கொண்டிருக்கிறது” என்றான். உடனே அவன் தந்தை, பட்டத்தின் நூலை அறுத்து விட்டார். பட்டம் தடுமாறிக் கீழே விழுந்தது. இப்பொழுது பார், வரையறைக்குட்பட்டு நூலுடன் இருக்கும்போது இந்தப் பட்டம் எவ்வளவு அழகாகப் பறந்து கொண்டிருந்தது? ஆனால், அந்த நூல்தான் பட்டத்தின் சுதந்திரத்தைத் தடுக்கிறது என்று நீ நினைத்தாய். இப்போது என்ன ஆயிற்று? நூல் அறுந்ததும் நிலை தடுமாறி, அந்தப் பட்டம் கீழே விழுந்துவிட்டதே! இதுபோலத்தான் நம் வாழ்க்கையும் நூலறுந்த பட்டமாய் இருந்தால் நாமும் வாழ்வில் தடுமாறக்கூடும்” என்று கூறினார்