பட்டம் கருத்துணர்திறன்

 உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.


குப்பன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். தான் செய்யும் வேலையில் யாரும் குறுக்கிடக்கூடாது என்று எண்ணுவான். சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமென்பதே அவன் ஆசை. ஒருநாள், அவன் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.


அப்போது, அவனுடைய தந்தை அங்கு வந்தார். “இந்தப் பட்டத்தைப் பார்க்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறது” எனக் கேட்டார். அதற்குக் குப்பன், “இந்த நூல் பட்டத்தின் சுதந்திரத்தைத் தடுத்துக் கொண்டிருக்கிறது” என்றான். உடனே அவன் தந்தை, பட்டத்தின் நூலை அறுத்து விட்டார்.


பட்டம் தடுமாறிக் கீழே விழுந்தது. இப்பொழுது பார், வரையறைக்குட்பட்டு நூலுடன் இருக்கும்போது இந்தப் பட்டம் எவ்வளவு அழகாகப் பறந்து கொண்டிருந்தது? ஆனால், அந்த நூல்தான் பட்டத்தின் சுதந்திரத்தைத் தடுக்கிறது என்று நீ நினைத்தாய். இப்போது என்ன ஆயிற்று? நூல் அறுந்ததும் நிலை தடுமாறி, அந்தப் பட்டம் கீழே விழுந்துவிட்டதே! இதுபோலத்தான் நம் வாழ்க்கையும் நூலறுந்த பட்டமாய் இருந்தால் நாமும் வாழ்வில் தடுமாறக்கூடும்” என்று கூறினார்

Comments

Popular posts from this blog

Tamil comprehension - தமிழ் பயிற்சித் தாள்-கருத்துணர்திறன் - நல்ல பழக்கங்கள்

Tamil comprehension - சாணக்கியரின் நேர்மை

புதிர்கள்