நேர்மை
மன்னன் ஒருவன் தன் நாட்டு மக்கள் நேர்மையாக வாழ்கின்றனரா என்று அறிய விரும்பினான். அதனால் அரசுப் பணியாளரிடம் இரண்டு ரொட்டித் துண்டுகளைக் கொடுத்து இரண்டு பேரிடம் கொடுக்கச் சொன்னார். ஒரு ரொட்டியில் வைரக்கற்களை உள்ளே வைத்தும் ஒரு ரொட்டித் துண்டில் ஒன்றும் வைக்காமலும் கொடுத்து விட்டார்.
அரசுப் பணியாளர் அரண்மனையை விட்டு வெளியே சென்று வைரக்கற்கள் உள்ள ரொட்டியைச் சாது ஒருவரிடமும் சாதாரண ரொட்டியைப் பிச்சைக்காரரிடமும் கொடுத்தான்.
மன்னர் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார். சாது ரொட்டியை வாங்கிப் பார்த்தார். பெரியதாகவும் கரடுமுரடாகவும் இருந்ததால் அது வேகவில்லை என எண்ணி அதனைப் பிச்சைக்காரரிடம் கொடுத்துவிட்டுப் பிச்சைக்காரரிடம் இருந்த ரொட்டியை அவர் வாங்கிக் கொண்டும் சென்று விட்டார்.
சாது வீட்டுக்குச் சென்றார். தாடியை அகற்றி விட்டு ரொட்டியைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் தாடியைப் பொருத்திக் கொண்டு வெளியே சென்றுவிட்டார். பிச்சைக்காரர் வீட்டிற்குச் சென்றார். தன் மனைவியுடன் ரொட்டியைப் பகிர்ந்து உண்பதற்காக எடுத்தார்.
அதற்குள் விலையுயர்ந்த வைரக் கற்களைப் பார்த்ததும் அதனை அரசுப் பணியாளரிடம் கொடுக்க முன் வந்தார். மனைவியோ தானே வைத்துக் கொள்ளலாம் என்று கூறினாள். அவர் அவளுடைய பேச்சைக் கேட்காமல் அரண்மனைக்கு எடுத்துச் சென்றார்.
மன்னரிடம் நடந்தவற்றைக் கூறினான். மன்னன் அவனுடைய நேர்மையைப் பாராட்டி அவர் கொண்டு வந்த வைரத்தை அவனுக்கே திருப்பிக் கொடுத்தார். பிச்சைக்காரரும் – தனது நேர்மைக்குக் கிடைத்த பரிசாக எண்ணி வாங்கிக் கொண்டார். கொஞ்சம் வைரத்தை விற்றுப் புதிய தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேறினார்.
நீதி : நேர்மைக்கு கிடைத்த பரிசு
Comments
Post a Comment