அகிலன் - நாய்க்குட்டி
அகிலன் ஒருநாள் பள்ளியில் இருந்து தன் அப்பாவுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். அப்போது சாலையோரத்தில் ஒரு நாய்க்குட்டியொன்று நடக்க முடியாமல் குரைத்துக் கொண்டிருந்தது. பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற மகிழுந்து வேகமாக வந்ததில் நாய்க்குட்டி பயந்து போய் ஓடியதில் அதனுடைய காலில் அடிபட்டுவிட்டது.
அகிலன் தன் அப்பாவிடம் அந்த நாய்க்குட்டியை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறினான். அப்பாவும் சரியென்று கூறிவிட்டு அந்த நாய்க்குட்டியை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அதற்கு ஊசி போட்டு, கொஞ்சம் மாத்திரைகளைக் கொடுத்தனர். வீட்டிற்குத் தூக்கி வந்து அதற்குப் பால் சாதம் கொடுத்தான். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மாத்திரையைக் கரைத்துக் கொடுத்தான். இரண்டு நாட்கள் தொடர்ந்து கொடுத்தான். அந்த நாய்க்குட்டி பழையபடி நன்றாக நடந்தது. அதற்குப் பிறகுதான் அகிலன் மகிழ்ந்தான்.
பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக:
1. அகிலன் சாலையோரத்தில் எதைக் கண்டான் ? _______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
2. நாயின் காலில் எப்படி அடிப்பட்டது?
_______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
3. அகிலன் அடிப்பட்ட நாயை பார்த்து என்ன செய்தான் ? _______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
4. நாயை கால்நடை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல அகிலனுக்கு உதவியது யார்?
_______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
5. அகிலன் எப்போது மகிழ்ச்சியடைந்தான் ?
_______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
Comments
Post a Comment