புத்திசாலி இளைஞன் அரசன் ஒருவனுக்கு திடீரென்று சித்தம் கலங்கி விட்டது. தன்னை ஒரு காளை மாடாக நினைத்துக்கொண்டான். அந்த நாட்டில் காளைகளைக் கொன்று உண்பது வழக்கத்தில் இருந்தது. அரசனும்,” நான் ஒரு மாடு . என்னைக் கொன்று அனைவரும் உண்டு மகிழுங்கள். என்னை வெட்டுங்கள்.உண்ணுங்கள்” என்று எந்த நேரமும் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தான். அனைவரும் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தார்கள். அரண்மனை மருத்துவரை அழைத்து விபரம் கூற , அவரும் அரசனுக்கு வந்துள்ள சித்தக் கலக்கத்தை சுலபமாகப் போக்கிவிடலாம். அதற்கு சக்தி வாய்ந்த மருந்துகள் உள்ளன என்று கூறிவிட்டு, மருந்தினைத் தயார் செய்தார். மருந்தை அரசனுக்குக் கொடுத்தபோது அவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, என்னை எப்போது வெட்டப் போகிறீர்கள் என்பதையே கிளிப்பிள்ளை போலத் திருப்பிச் திருப்பிச் சொல்லிக்கொண்டு பட்டினியாகவே கிடந்தான். அதனால் அவனது உடல் நலம் மேலும் சீர்கெட்டது. அரசனை எப்படியாவது சாப்பிட வைத்துவிடவேண்டும் என்று பலரும் பலவிதமாக முயற்சித்தும் தோல்வியே அடைந்தார்கள். அப்போது ஒரு புத்திசாலி இளைஞன் இதைப் பற்றிக் கேள்விப்பட்டான். “அரசனை நான் சாப்...