முன்னுரை : வளர்ந்துவரும் நவீனயுகத்தில் நாம் அனைவரும் இயற்கையை மறந்து செயற்கையைப் போற்றியதால் பல தீமைகளை எதிர்கொள்கிறோம். இந்நிலையை மாற்றுவதே இயற்கை வேளாண்மை. அதனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். மாசடைந்த நிலங்கள் : நல்ல விளைச்சல், பார்ப்பதற்குப் பெரிய பெரிய காய்கறிகள், கனிகள், குறுகிய காலத்தில் நிறைய இலாபம் இதனை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தினோம். அதனால் வளம் இழந்தது மண் மட்டுமா? நாமும்தான். நீர்வளம், நிலவளம் குறைந்தது போல நமக்கும் புதிய புதிய நோய்கள் வந்து வலுவிழந்துவிட்டோம். இயற்கை உரங்கள் : மண்புழுக்களை உற்பத்தி செய்து உரமாகப் பயன்படுத்துதல், கால்நடைகளின் சாணங்களை எருவாக்குதல், பண்ணையில் வளர்க்கப்படும் பறவை, விலங்குகளின் கழிவுகளை உரமாக்குதல், ஆமணக்கு, நிலக்கடலை, எள், பருத்தி, தேங்காய் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பிண்ணாக்குகளை உரமாக்குதல். இவையனைத்தும் இயற்கை உரங்கள். இவற்றைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவோம். நன்மைகள் : இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் விளைநிலங்களில் நன்மை செய்யும் பூச்சிகள், நுண்ணுயிரிகளின் எண்ணிக்கைபெருகுகிறது...