Posts

Showing posts from November, 2021

சேர்த்து எழுதுக 4

  சேர்த்து எழுதுக 1. தாய் + மொழி = தாய்மொழி 2. கார் + மேகம் = கார்மேகம் 3. கோலம் + மயில் = கோலமயில் 4. நியாயம் + விலை =நியாயவிலை 5. குடும்பம் + நெறி = குடும்பநெறி 6. முதுமை + மொழி =முதுமொழி 7. சமம் + வெளி = சமவெளி 8. நிலம் + நடுக்கம் =நிலநடுக்கம் 9. வனம் + விலங்கு =வனவிலங்கு 10. நாளை + கழிக்கும் =நாளைக்கழிக்கும் 11. பயிர் + தொழில் = பயிர்த்தொழில் 12. குடிசை + தொழில் = குடிசைத்தொழில் 13. கலை + பொருள் = கலைப்பொருள் 14. அவை + களம் =அவைக்களம் 15. தொலை + காட்சி = தொலைக்காட்சி 16. கடல். + கரை. = கடற்கரை 17. பகல் + பொழுது = பகற்பொழுது 18. பல் +பொடி = பற்பொடி 19. மல் +போர். =மற்போர் 20. கல் + குவியல் = கற்குவியல் 21. சொல் +போர். = சொற்போர் 22. கல்வியில் +பெரியவர் =கல்வியிற்பெரியவர் 23. தொழில் + சாலை = தொழிற்சாலை 24. அறிவு ...

ளகர வரிசை - உயிர் மெய் வரிசைகள்

  ளகர வரிசை ள் + அ = ள ள் + ஆ = ளா ள் + இ = ளி ள் + ஈ = ளீ ள் + உ = ளு ள் + ஊ = ளூ ள் + எ = ளெ ள் + ஏ = ளே ள் + ஐ = ளை ள் + ஒ =ளொ ள் + ஓ = ளோ ள் + ஒள = ளௌ

கருத்துணர்திறன் வகுப்பு 3-6

  உரைப்பகுதியை படித்து வினாக்களுக்கு விடையளிக்க சிறு தானிய உணவுகளே நம் உடல் நலத்திற்கு ஏற்றவை. குதிரை வாலி அரிசி, தினை, வரகரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம், பனிவரகு அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, போன்றவை சிறு தானியங்கள் ஆகும். இந்தச் சிறு தானியங்களைக் கொண்டு பல உணவு வகைகளை மண் பானைகளில் சமைத்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. நாம் உண்ட உணவு முழுமையாகச் செரித்தபிறகுதான் அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். இதைத் தான் நம் முன்னோர் “பசித்துப் புசி” என்றனர். இவற்றைத் தவிர்த்துவிட்டுத் துரித உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியதே பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. சிறு தானிய உணவுகளை உண்போம்! வளமான வாழ்வைப் பெறுவோம்! வினாக்கள்  1.எவ்வகை உணவு முறை நமக்கு ஏற்புடையது?  2.சிறு தானியங்களுள் எவையேனும் நான்கு எழுதுக. 3.துரித உணவு வகைகளை உண்ணக் கூடாது, ஏன்?

2 பா -14 ஓடி விளையாடு பாப்பா

Image
 

ழகர வரிசை - உயிர் மெய் வரிசைகள்

ழகர வரிசை ழ் + அ = ழ ழ் + ஆ = ழா ழ் + இ = ழி ழ் + ஈ = ழீ ழ் + உ = ழு ழ் + ஊ = ழூ ழ் + எ = ழெ ழ் + ஏ = ழே ழ் + ஐ = ழை ழ் + ஒ =ழொ ழ் + ஓ = ழோ ழ் + ஒள = ழௌ  

கழுதை, நாய் -கருத்துணர்திறன்

  அறிவுக் கதைகள் நாயை வளர்த்தான் வண்ணான். துணிகளைத் திருடாமல் காவல் காத்துவந்தது அது. ஒரு சமயம் திருட வந்தவனைக் கண்டு குரைத்தது. வீட்டுக்கார வண்ணான் விழித்துக் கொள்ளவே, வந்த திருடன் ஓடிப்போய் விட்டான். இதனால் நாயைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தான். இப்படியிருக்க. சில நாட்களுக்குப் பின், வேறொரு திருடன் துணிமணிகளைத் திருட வந்தான். நாய் அங்கு இல்லை. திருடனைப் பார்த்த கழுதை சத்தம் போட ஆரம்பித்தது. வண்ணான் எழுந்தான்; தடியை எடுத்து வந்தான். “பகலெல்லாம் உழைத்து இரவிலே தூங்குகிற என்னைத் தூங்கவிடாமல் கத்தித் தொந்தரவு படுத்துகிறாயே! இது சரியா?” என்று, அடித்து நொறுக்கினான். இதிலிருந்து ஒருவர் வேலையை மற்றொருவர் செய்யக் கூடாது என்று தெரியவருகிறது. சில வேலைகளைச் சிலர் தான் செய்யவேண்டும் ; அந்த வேலையை மற்றவர் செய்யக்கூடாது என்பது உண்மைதானே! எதிர்ச் சொல் தருக 1. மகிழ்ச்சி  × __________________ 2. சத்தம்        × _____________ 3. உண்டு      × _____________ 4. சரி              × _____________ 5. சிலர்      ...

வகர வரிசை - உயிர் மெய் வரிசைகள்

வகர வரிசை வ் + அ = வ வ் + ஆ = வா வ் + இ = வி வ் + ஈ = வீ வ் + உ = வு வ் + ஊ = வூ வ் + எ = வெ வ் + ஏ = வே வ் + ஐ = வை வ் + ஒ =வொ வ் + ஓ = வோ வ் + ஒள = வௌ

ஆங்கில மாதங்கள் - நிரப்புக

ஆங்கில மாதங்கள் 1. _____ னவரி 2. பிப்____வரி 3. மா____ ச் 4. ஏப்ர____ 5. மே 6. ஜூ_____ 7. _____ லை 8. ஆக____ ட் 9. செப்ட_____ பர் 10. அக்டோப_____ 11. ந____ ம்பர் 12. _____ சம்பர்

லகர வரிசை - உயிர் மெய் வரிசைகள்

  லகர வரிசை ல்   + அ        = ல ல்   + ஆ       = லா ல்   + இ        = லி ல்   + ஈ         = லீ ல்   + உ        = லு ல்   + ஊ       = லூ ல்   + எ         = லெ ல்   + ஏ         = லே ல்   + ஐ        = லை ல்   + ஒ        = லொ ல்   + ஓ       = லோ ல்   + ஒள = லௌ

திறனறிதல் 5.2 கண்மணியே கண்ணுறங்கு ஆறாம் வகுப்பு

  5.2 பொருள் 1. பார் - 2. பண் – எதிர்ச் சொல் 1. உதித்த × _______ தொகைச்சொற்கள் 1 . முக்கனி - ________,________,________. விடை எழுது இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை?

ரகர வரிசை - உயிர் மெய் வரிசைகள்

  ரகர வரிசை ர் + அ = ர ர் + ஆ = ரா ர் + இ = ரி ர் + ஈ = ரீ ர் + உ = ரு ர் + ஊ = ரூ ர் + எ = ரெ ர் + ஏ = ரே ர் + ஐ = ரை ர் + ஒ =ரொ ர் + ஓ = ரோ ர் + ஒள = ரௌ

பனிமலைப் பயணம் எளிய சொற்கள்

Image

மகர வரிசை சொற்கள்

Image
 

ஓரெழுத்துச் சொற்கள் - தமிழ் பயிற்சித்தாள்

Image
 

உயிர்க்குறில் உயிர் நெடில் வகைப்படுத்துக வகுப்பு - 1 முதல் 3 வரை

Image