ர,ற வேறுபாடு அறிக Tamil work sheet
ர, ற வேறுபாடு அறிக மரம் - ஓரறிவு உயிர் 1.மரம் மனிதனுக்கு பலவகையில் பயன்படுகிறது. மறம் - வீரம் 2.பண்டைய தமிழர்கள் மறச் செயல்புரிந்து புகழ் பெற்றனர். இரத்தல் – யாசித்தல். 3.பிறரிடம் யாசித்தல் இழிவானது. இறத்தல் – உயிர் உடலை விட்டு பிரிதல். 4.இறக்கும் வரையிலும் கல்வி கற்க வேண்டும். குரை – நாய் எழுப்பும் ஒலி ( சத்தம் ) 5.திருடனைப் பார்த்து நாய் குரைத்தது. குறை – தவறு /மிச்சம் 6.பிறரிடம் குறைகளை காணக் கூடாது. பற -சிறகை விரித்து உயரே செல்லல். 7.கழுகு உயரத்தில் பறக்கும். பர – பரவிய 8.தமிழர்கள் உலகெங்கும் பரந்த அளவில் வாழ்கின்றனர். எரி – நெருப்பு 9.நாளுக்கு நாள் எரிபொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. எறி – வீசுதல் 10.குப்பைகளைத் தெருவில் எறியக்கூடாது. அரி - சிங்கம் 11.அரி காட்டின் அரசன். அறி – தெரிந்து கொள் 12.உலக நடப்புகளை அறிந்து கொள். இறை - கடவுள் 13.எழுத்து அறிவித்தவன் இறைவன். இரை -உணவு 14.பறவைகள் இரைத் தேடப் புறப்பட்டன. அரை – பாதி 15.ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன். அறை - வீட்டின் ஒரு பகுதி 16.எங்கள் வீட்டின் சமையல் அறை அழகாக இருக்கும். அருகு – பக்கம் 17.எங்கள் வீட்டின் அர...